கனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

கனா படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி எல்லோரும் வருத்தப்பட்டார்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

news18
Updated: August 23, 2019, 10:14 AM IST
கனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
கனா திரைப்பட போஸ்டர்
news18
Updated: August 23, 2019, 10:14 AM IST
கனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறதா என்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன், பிரபல இயக்குநர் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் ’மெய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  மெய் படத்தில் மருந்து கம்பெனி பிரதிநிதியாக வருகிறேன். பெரிய இயக்குனர், புதுமுக இயக்குனர் என்று பாகுபாடு பார்க்காமல் நடிக்கிறேன். மெய் படத்தில் புதுமுகம் நிக்கி சுந்தரம் தான் கதாநாயகன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்  கனா படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி எல்லோரும் வருத்தப்பட்டார்கள். எனக்கு வருத்தம் இல்லை. தேசிய விருது அறிவிப்பையே கவனிக்கவில்லை. கீர்த்தி சுரேஷ் தேசிய விருதுக்கு முழு தகுதி உடையவர் என்றும் தெரிவித்தார்.

மெய் படத்தினை தொடர்ந்து க/பெ ரண சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் படங்களிலும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

Also see...

First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...