• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாயாக நடிப்பதில் தயக்கமில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

தாயாக நடிப்பதில் தயக்கமில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சோனிலிவ் தெலுங்கு திரைப்படம் ஒன்றை தமிழில் ரிமேக் செய்கிறது. அதிலும் இவரே நாயகியாக நடிக்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த திட்டம் இரண்டு சோனிலிவ் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. நாயகி மையத்திரைப்படமான இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள பூமிகா திரைப்படம் வெளியாகிறது. 

பூமிகா படத்தை ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 22 நாளை ஓணத்தை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரையரங்கில் வெளியாகிக் கொண்டிருந்தப் படங்கள் ஓடிடியில் வெளியாகி, தற்போது  நேரடியாக தொலைக்காட்சியிலும் வெளியாகி வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா படமும் அந்த வழியில் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது. அத்தடன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிறது.

Also read... இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவல் மெல்போர்ன் 2021-ல் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் நடிகர் சூர்யா!

பூமிகாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், இதுபோன்ற வேடங்களில் இப்போது நான் மட்டுமே நடித்து வருகிறேன். தாயாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பூமிகாவைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு செடியையாவது வளர்ப்பார்கள் என தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சோனிலிவ் தெலுங்கு திரைப்படம் ஒன்றை தமிழில் ரிமேக் செய்கிறது. அதிலும் இவரே நாயகியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் அவரத சகோதரியாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளது முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: