இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டேன் - காரணம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டேன் - காரணம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!
இந்தியன் 2 | ஐஸ்வர்யா ராஜேஷ்
  • News18
  • Last Updated: September 25, 2019, 4:41 PM IST
  • Share this:
‘இந்தியன் 2’ படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

காக்கா முட்டை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கனா படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

கனா படத்தை அடுத்து நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். மேலும் விஜய்தேவரகொண்டா நடிக்கும் வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.


இதனிடையே சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டதாக பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் தான் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அதனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. சிறந்த வரலாற்றுப் படமாக இந்தியன் 2 அமையும் . சங்கர், கமல்ஹாசன் என்ற இரண்டு ஜாம்பவான்கள் இருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனததற்காக இரண்டு நாட்களாக தூங்கவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல எந்த நடிகருடனும் தங்கையாக நடிக்கத் தயார் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.Watch Also:
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading