காதலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: விரைவில் திருமணம்?

நடிப்பில் பிஸியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் நடக்கயிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் காதல் திருமணம் என்றே கூறப்படுகிறது.

காதலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: விரைவில் திருமணம்?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
  • News18
  • Last Updated: May 10, 2019, 2:51 PM IST
  • Share this:
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக இவர் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வெளியான கனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். இதுதவிர இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

Also read... டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.இப்படங்களைத் தொடர்ந்து, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், எஸ்கே 16, மெய் என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிஸியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு விரைவில் திருமணம் நடக்கயிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. அதுவும் காதல் திருமணம் என்றே கூறப்படுகிறது.

Also see...

First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading