Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.1 லட்சம் கொரோனா நிதியுதவி

ஐஸ்வர்யா ராஜேஷ்

முன்னதாக, ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஷங்கர், வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்தனர்.

  • Share this:
    கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை கொடூரமாக மாறியிருக்கிறது. பல உயிர்களை பலி வாங்கியிருக்க இத்தொற்று, மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. இதற்கிடையே தொற்றுநோயை தடுப்பு பணிகளை அதிகரிக்க தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல கோலிவுட் நட்சத்திரங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    சமீபத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு பங்களித்தார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்துப் போராட மாநில அரசுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். இது தவிர, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் FEFSI தொழிற்சங்கத்திற்கும் ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார்.

    முன்னதாக, ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஷங்கர், வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்தனர்.

    தவிர, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சனின் தமிழ் ரீமேக் மற்றும் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அவரது பூமிகா படம் போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: