ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

50kg தாஜ்மஹால்.. உலக அழகி டூ நந்தினி.. ஐஸ்வர்யா ராயின் திரைப் பயணம்!

50kg தாஜ்மஹால்.. உலக அழகி டூ நந்தினி.. ஐஸ்வர்யா ராயின் திரைப் பயணம்!

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி பட்டத்தை ஐஸ்வர்யா ராய் வென்றவுடன் அவரை சுடச்சுட நடிகையாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா தான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மாசு படாத பால் முக அழகில் சொக்கி போனார்கள் தமிழ் ரசிகர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

50 கேஜி தாஜ்மஹால் என வைரமுத்து வர்ணித்த ஐஸ்வர்யா ராய் தற்பொழுது 50 வயதை எட்டிப் பிடிக்க உள்ளார். இன்று அவரது 49 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது திரை பயணம் குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

பொன்னியின் செல்வன் நாவலில் எதிரில் இருக்கும் அனைவரையும் வசீகரிக்கும், கண்ணில் வஞ்சகம் கக்கும் பெண் என்ற நந்தினியின் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் மணிரத்தினத்தின் மனதில் நடிகை ஐஸ்வர்யா ராய் நினைவு வந்தது ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் இரண்டு தசாப்தங்களாக அழகிய பெண் என்ற உடன் இந்தியர்கள் அனைவரின் விழித்திரையிலும் விரியும் ஒரு உருவம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் ஆகிய பட்டங்களை ஐஸ்வர்யா ராய் வென்ற பொழுது தான் இந்தியர்கள் பலருக்கும் தெரியும் இப்படி ஒரு போட்டி நடக்கிறது என்பதே. உலக அளவில் வர்த்தக நிறுவனங்கள் அதிக நுகர்வோர் உள்ள நாடுகளை குறிவைத்து அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய வழங்கும் டைட்டில் என சொல்லப்பட்டாலும், உலக அழகி என்ற வார்த்தைக்கு கச்சிதமாய் பொருந்தி போகும் பெயர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி பட்டத்தை ஐஸ்வர்யா ராய் வென்றவுடன் அவரை சுடச்சுட நடிகையாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா தான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மாசு படாத பால் முக அழகில் சொக்கி போனார்கள் தமிழ் ரசிகர்கள்.

இதன் பிறகு இப்படிப்பட்ட நடிகையை எப்படி தவற விட்டோம் என ஹிந்தி சினிமா ஐஸ்வர்யா ராய் கவர்ந்து கொண்ட போதும் அவ்வப்போது தமிழ் சினிமாவின் அழைப்பை ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் மறுக்காமல் ஏற்றார் ஐஸ்வர்யா ராய்.

நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை பலமுறை மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார். சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துவிட வேண்டும் என பெரு முயற்சி மேற்கொண்ட ரஜினிகாந்த்திற்கு அவரது ஆசை கை கூடியது எந்திரன் திரைப்படத்தில் தான். அரிமாவாக கர்ஜித்த ரஜினியின் முன்னாள் பொன்மானாக ஐஸ்வர்யா ராய் துள்ளி குதித்து ஓடும் காட்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

Also read... முழுமதி அவளது முகமாகும்… மல்லிகை அவளது மணமாகும்… ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு தான் ஜோடியாக நடிப்பதாக தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் ரஜினிகாந்த் சொன்னபோது அவர் எழுப்பிய எதிர் கேள்விகளாக ரஜினி, எந்திரன் படவிழாவில் பேசியது இன்றளவும் பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

Ponniyin Selvan actress, Ponniyin Selvan actress list, பொன்னியின் செல்வன் நடிகைகள், Ponniyin Selvan vikram, Ponniyin Selvan karthi, Ponniyin Selvan jayam ravi, Ponniyin Selvan trisha, Ponniyin Selvan aishwarya rai, பொன்னியின் செல்வன் படங்கள், பொன்னியின் செல்வன் த்ரிஷா, பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் ஜெயம்ரவி, பொன்னியின் செல்வன் விக்ரம், பொன்னியின் செல்வன் கார்த்தி, Ponniyin Selvan shooting spot pictures, Ponniyin Selvan aishwarya rai, maniratnam, mani ratnam ponniyin selvan, maniratnam ponniyin selvan release, மணிரத்னம், மணிரத்னம் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி, ponniyin selvan new poster, ponniyin selvan movie, ponniyin selvan jayam ravi, ponniyin selvan trisha, பொன்னியின் செல்வன் த்ரிஷா, பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி,

விவேகோபராய், சல்மான் கான் என பல பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டாலும் ஐஸ்வர்யா ராய் கரம் பிடிக்கும் பாக்கியம் பெற்றது என்னவோ அபிஷேக் பச்சன் தான். ஆராதனா என்று ஒரு பெண் குழந்தை ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்த பின்னர் உடல் எடை பிரச்சனையில் அவதிப்பட்ட போதும் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து நடிக்க திரும்பி இருக்கும் ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வனில் நந்தினியாய் மிரட்டி இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் இன்னும் தீயாய் மிரட்ட காத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Aishwarya Rai