ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை… பின்னணி காரணங்கள் என்ன?

இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை… பின்னணி காரணங்கள் என்ன?

நடிகை ஐன்டிரிலா சர்மா

நடிகை ஐன்டிரிலா சர்மா

ஐன்டிரிலாவுக்கு 2 முறை புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர் முழுமையாக மீண்டு பின்னர் நடிப்பில் ஈடுபட்டு வந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மாரடைப்பால் 24 வயதாகும் நடிகை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி காரணங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

  மாரடைப்பு காரணமாக பிரபல நடிகை ஐன்டிரிலா சர்மா இன்று உயிரிழந்தார். இளம் வயதில் அவரது உயிர் பிரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐன்டிரிலா சர்மா பெங்காலி மொழியில் பிரபல நடிகையாக உள்ளார்.

  இவருக்கு சில முறை நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி அதிகம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

  டாக்டர் ஒரு டவுட் : பெரும்பாலும் அதிகாலையில் மாரடைப்பு வர என்ன காரணம்..? விளக்கும் இதய நோய் நிபுணர்...

  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ஐன்டிரிலாவுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று மதியம் 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

  ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு 1 மாதத்திற்கு முன் இந்த எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றலாம் - பெண்களே அலெர்ட்!

  24 வயதே ஆகும் ஐன்டிரிலா உயிரிழந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  தவறாக புரிந்து கொள்ளப்படும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் - உண்மையான அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்

  நடிகையின் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர். ஐன்டிரிலா சர்மாவின் மரணத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இளம் வயதிலேயே மாரடைப்பு வர இந்த பிரச்சனையும் முக்கிய காரணம் - ஆய்வில் வெளியான உண்மை...

  இந்நிலையில் ஐன்டிரிலாவுக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கான பின்னணி காரணங்கள் வெளிவந்துள்ளன. அவர் சில வாரங்களுக்கு முன்பாகத்தான் மூளை பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, மூளையின் இடப்பக்கத்தில் இரத்தக் கசிவு அதிகம் காணப்பட்டுள்ளது தெரியவந்தது.

  Heart Attack : மாரடைப்பின் வகைகளும்... அதன் அறிகுறிகளும்...

  வாரக் கணக்கில் சிகிச்சை பெற்று வந்த ஐன்டிரிலா பின்னர், பாதிப்பிலிருந்து உடல் நலம் தேறியுள்ளார். இதற்கு அவரது மன வலிமையே முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

  இதேபோன்று ஐன்டிரிலாவுக்கு 2 முறை புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர் முழுமையாக மீண்டு பின்னர் நடிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress, Kollywood