Home /News /entertainment /

நடிகர் திலீபுக்கு எதிரான நடிகை கடத்தல் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு…

நடிகர் திலீபுக்கு எதிரான நடிகை கடத்தல் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு…

நடிகர் திலீப்

நடிகர் திலீப்

வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கேரள நடிகை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர் திலீப் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டார். அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதனை வீடியோவாக சிலர் எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கு தொடர்பாக முதலில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரளாவில் முன்னணி நடிகராக இருக்கும் திலுபுக்கும் தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தார். தற்போது திலீப் ஜாமீனில் இருக்கிறார். ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து நடிகை பிளாக்மெயில் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை கடந்த நடிகை சமந்தா…

    இந்த வழக்கு தொடர்பாக  விசாரணை அதிகாரி ஒருவரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியதாக, நடிகர் திலீப் மீது மற்றொரு வழக்கு பாய்ந்தது. நடிகை கடத்தல் வழக்கை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணைக் குழுவிற்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    ஆனால் அந்த காலகட்டத்துக்குள் விசாரணை முடியவில்லை. இது தொடர்பாக கூடுதல் கால அவகாசம் கேட்டு கொச்சி சிறப்பு நீதிமன்றம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் ரீசென்ட் போட்டோஸ்!

    இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க கால அவகாசம் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜாமீனில் வெளிவந்திருக்கும் நடிகர் திலீப் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள 147-வது படத்தில் ஹீரோயினாக நடிகை தமன்னா நடிக்கிறார். மலையாளத்தில் தமன்னா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Mollywood

    அடுத்த செய்தி