Actor Vivek: விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்ட நடிகை!

Actor Vivek: விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்ட நடிகை!

விவேக் - ஆத்மிகா

மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ஆத்மிகா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ஆத்மிகா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.



    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் - திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர். அதோடு விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் பலர் மரக்கன்றுகளுடன் கலந்துக் கொண்டனர். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது நடிகை ஆத்மிகா, விவேக்கின் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதுபற்றிய பதிவில், ”நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: