Home /News /entertainment /

9 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் விஜய் - அஜித் படங்கள்!

9 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் விஜய் - அஜித் படங்கள்!

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

விஜய் மற்றும் அஜித் ஆகியோர் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் திரையரங்கு சார்ந்த வியாபாரம் சுமார் 350 கோடியை தாண்டும் என  திரைத்துறையினர் கணிக்கின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழ் சினிமாவில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் திரையரங்கு சார்ந்த வியாபாரம் சுமார் 350 கோடியை தாண்டும் என  திரைத்துறையினர் கணிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளனர்.  இவர்களின் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாவாக கொண்டாடுகிறது.  இதன் காரணமாக அருவரின் பல  திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைகின்றன.

விஜய் - அஜித் ஆகியோரின் படங்கள் பத்துக்கும் மேற்பட்ட முறை ஒரே நாளில் வெளியாகியுள்ளன. அதில் 2001-ம் ஆண்டு ப்ரண்ட்ஸ் - தீனா, 2007-ல் போக்கிரி - ஆழ்வார், 2014-ல் ஜில்லா - வீரம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளன.

விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்தை தொடும். திரையரங்கில் வசூலும் பெரிய அளவில் இருக்கும். அதேசமயம் சில இடங்களில் இரண்டு தரப்பு ரசிகர்களுக்குள் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது குறைந்துவிட்டன. இறுதியாக 2014 ம் ஆண்டு வெளியான ஜில்லா - வீரம் படங்களே கடைசி மோதிக்கொண்டன.

இந்த நிலையில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை நோக்கி படக்குழுவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். அதேசமயம் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துகொண்டுள்ள அவரின் 61வது படத்தையும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதிலும் தமிழகத்தில் உள்ள முன்னணி விநியோக நிறுவனம் அந்தப் படத்தை வெளியிடவுள்ளது. இதனால் பொங்கல் பண்டிக்கைக்கு இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகளை ஒதுக்குவது குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ளன. இருந்தாலும் அவை அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே வேகமெடுக்கும்.

Also read... திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

இதனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - அஜித் ஆகியோரின் படங்கள் ஒரேநாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிர்களை போல திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களில் வெளியானால் வசூல் பெரிய அளவில் இருக்கும் என கூறுகின்றனர். அதிலும் டிக்கெட், கேண்டீன், பார்க்கிங் உள்ளிட்ட திரையரங்கு சார்ந்த வியாபாரம் மட்டும் சுமார் 350 கோடியை தொடும் என கணிக்கின்றனர். அதே பேட்ட - விஸ்வாசம் படங்கள் போல் இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்தால் அந்த வியாபாரம் 400 கோடி ரூபாயை தொடும் என்றும் கூறுகின்றனர்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிகொண்டிருக்கின்றன. குறிப்பாக அஜித் படத்திற்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. அதை தாய்லாந்த் நாட்டில் நடத்தவுள்ளனர். அதேபோல் விஜய் படம் அக்டோபர் மாதத்திற்குள் முடிந்துவிடும். எனவே இரண்டு படங்களின் அனைத்து வேலைகளும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Ajith, Entertainment

அடுத்த செய்தி