துணை நடிகர்கள் சம்பளம் விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அத்துடன் இரண்டு சங்ககளில் உள்ள புகார்கள் குறித்தும் விவாதித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சுமார் 3300 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. அதில் பெரும்பாலானோர் துணை நடிகர்களாக உள்ளனர். அதேபோல் பெப்சி அமைப்பிற்கு கீழ் உள்ள வெண்திரை நடிகர் சங்கத்திலும் துணை நடிகர்கள் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு சங்கத்தில் உள்ள துணை நடிகர்களுக்கு வெவ்வேறு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இணையத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள்!
குறிப்பாக, பெப்சி அமைப்பிற்கு கீழ் வரும் துணை நடிகர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 775 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்களுக்கு நாள் ஒன்றுக்கு 525 ரூபாய் மட்டுனே சம்பளம் வழங்கப்படுகிறது. துணை நடிகர்களுக்கு இரு வேறு சம்பளம் வழங்குவதை ஒழுங்குமுறைபடுத்த தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இரு சங்கத்தினர் பேச்சுவார்த்தை
அதில் பெப்சி அமைப்பு உறுப்பினர்களைப் போல் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் 775 ரூபாய் சம்பளம் இன்று முதல் வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உள்ள புகார்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் முன் தொகை பெற்ற பிறகு கால்ஷீட் வழங்காமல் உள்ள நடிகர்கள் மற்றும் திரைப்பட வேலைகளை முடித்துக் கொடுத்த நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பாகுபலி வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு… படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி துணைத்தலைவர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.