தங்கள் மனைவிகளோடு மலையாள ஹீரோக்கள் - வைரலாகும் குரூப் படம்!

வைரலாகும் மலையாள நடிகர்களின் படம்

மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தில் நடித்து வரும் ஃபகத் பாசில், தெலுங்கில் புஷ்பா படத்திலும், தமிழில் விக்ரம் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

 • Share this:
  தென்னிந்திய திரைப்பட முகங்களாக உருவாகி உள்ள மலையாள ஹீரோக்கள் பகத் பாசில், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் அவர்களது மனைவிகளோடு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் துல்கர் சல்மான், தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ஃபகத் பாசில், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ள பிரித்விராஜ் ஆகியோர் தங்கள் மனைவிகளோடு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Actors Dulquer Salmaan, Fahadh Faasil, Prithviraj Sukumaran's Family Picture goes viral
  வைரலாகும் மலையாள நடிகர்களின் படம்


  துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் குருப், சல்யூட் என்ற படங்களிலும், தமிழில் ஹே சினாமிகா என்ற படத்திலும், தெலுங்கில் யுத்தம் தோ ரசின பிரேம கதா என நான்கு படங்களிலும் நடித்து வருகிறார். மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தில் நடித்து வரும் ஃபகத் பாசில், தெலுங்கில் புஷ்பா படத்திலும், தமிழில் விக்ரம் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் வெற்றி பெற்ற பிரித்விராஜ் தற்போது 2 படங்களின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: