Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தை ட்விட்டரில் பிரபலப்படுத்தும் நடிகர்கள்!

பொன்னியின் செல்வன் படத்தை ட்விட்டரில் பிரபலப்படுத்தும் நடிகர்கள்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்களில் புதிய பாணில் நடிகர் நடிகைகள் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெற்றும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும், செய்தியளர்கள் சந்திப்பு நடைபெறும். அதில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு பேசுவார்கள். சிலர் தொலைக்காட்சிகளுக்கும், இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பார்கள்.

இன்னும் சிலர் பாடல் வெளியீட்டு விழாவுடன் நிறுத்திக்கொள்வார்கள். இதனால் படத்தின் தயாரிப்பாளர் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க படாதபாடுபடுவார்கள். தங்களின் கஷ்டங்களை பல முறை வெளிப்படையாகவும் மேடைகளில் கூறியுள்ளனர். அதேபோல் தயாரிப்பாளர்கள் சங்கமும் முயற்சித்தது. ஆனால் எந்த பலனும் இல்லை.

ஆனால் இவை அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்திற்கு தலைகீழாக நடந்துள்ளது. குறிப்பாக நடிகர், நடிகைகள் தாங்களாகவே முன்வந்து படத்தை பிரபலப்படுத்துகின்றனர்.

குறிப்பாக ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, குந்தவையாக வரும் த்ரிஷ் ஆகியோர் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்.

சமீபத்தில் டிவிட்டர் கணக்கு தொடங்கிய விக்ரம் தன்னுடைய பகுதியில் இருந்த பெயரை ஆதித்த கரிகாலன் என மாற்றியுள்ளார். அதேபோல் 55 லட்சம் Follower-களை கொண்ட த்ரிஷா தன்னுடைய பெயரை குந்தவை என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் தங்கள் கதாபாத்திரத்தை வைத்துள்ளனர்.

இதுதவிர டிவிட்டர் பதிவுகளாகளை பொன்னியின் செல்வன் கதையோட்டத்துடன் கூடிய உரையாடல் பாணியில் நிகழ்த்துகின்றனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டித்திக்கும் புலிக்கொடி திரைப்பயணம் தொடங்கும் முன், பெருவுடையார் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்திய தேவன் வருவான். என்ன நண்பா,  வருவாய்தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.விக்ரமிற்கு பதிலளித்த ஜெயம்ரவி,  "தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்..  இதோ நானும் வந்தியதேவனுடன் வந்து விடுகிறேன், என் அண்ணனை வீழ்த்தவும், வெல்லவும் யாராலும் இயலாது" என கூறியுள்ளார்.கரிகாலன் பதிவுக்கு வந்திய தேவன் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அதில், "இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me" என கூறியுள்ளார்.அதற்கு சில போர்களை தனியாகதான் வெல்ல வேண்டும் என விக்ரம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவர்களின் பதிவுகள் அடுத்தடுத்து சுவாரஸ்யமாக வருகின்றன.இவை அனைத்தும், டிவிட்டர் உரையாடலாக இருந்தாலும், படத்தின் கதை தன்மையிலும், கதாபாத்திரங்களின் பின்னோட்டத்துடனுமே இருக்கிறது. இவையனைத்தையும் த்ரிஷா தன்னுடைய பகுதியில் பகிர்ந்துள்ளார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா  உரையாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த வகையிலான புரமோஷனுக்கு முதல் அடித்தளமிட்டவர் கார்த்தி. குந்தவை கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த அன்று, நடிகர் கார்த்தி "இளவரசி.. Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!" என பதிவிட்டார். அதற்கு த்ரிஷா, "Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed" என பதிலளித்தார்.

Also read... VTK Twitter Review: எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு படம்? - ட்விட்டர் விமர்சனம்!

இவர்களின் இந்த இரண்டு பதிவுகளும் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த அடிதளமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதள புரமோஷன் தவிர, சென்னை, ஐத்தராபாத், மும்பை, டெல்லி, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும் படத்தை பிரபபலப்படுத்தவுள்ளனர். எனவே, வரும் 20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பொன்னின் செல்வன் படக்குழுவினர் பல இடங்களுக்கு பறக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Aishwarya Rai, Ponniyin selvan

அடுத்த செய்தி