Home /News /entertainment /

‘லொகேஷன் அனுப்புங்க இளவரசி… கடிதம் தர வேண்டும்’ - த்ரிஷாவை கலாய்க்கும் கார்த்தி…

‘லொகேஷன் அனுப்புங்க இளவரசி… கடிதம் தர வேண்டும்’ - த்ரிஷாவை கலாய்க்கும் கார்த்தி…

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா - கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா - கார்த்தி

Ponniyin Selvan – 1 நாளை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    பொன்னியின் செல்வன் படத்தை குறிப்பிட்டு நடிகை த்ரிஷாவை நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ள பதிவு அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

    தமிழில் பிரமாண்ட வரலாற்றுப் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன், வெள்ளித் வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. பொன்னியின் செல்வனை புத்தகத்தில் மட்டுமே படித்தவர்கள், இந்தத் திரைப்படத்தை காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

    நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், கடந்த 4 நாட்களாக படக்குழுவினர், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க - முறையாக வரி செலுத்திய மஞ்சு வாரியர்... பாராட்டி கெளரவித்த மத்திய அரசு!

    அந்த வகையில் இன்று குந்தவை கதாபாத்திரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த கேரக்டரில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் குந்தவையின் காதல் கணவனாக வந்தியத்தேவன் கேரக்டரில், கார்த்தி நடிக்கிறார்.

    தற்போது வரை ஆதித்ய கரிகாலன் (விக்ரம்), வந்தியத்தேவன் (கார்த்தி), நந்தினி (ஐஷ்வர்யா ராய்) மற்றும் குந்தவை (த்ரிஷா) ஆகிய கேரக்டர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் கதைப்படி, அண்ணன் ஆதித்த கரிகாலன் அளிக்கும் ஓலை எனப்படும் கடிதத்தை அவரது தங்கை குந்தவையான திரிஷாவிடம் வந்தியத்தேவன் (கார்த்தி) அளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க - விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர்

    இந்நிலையில் த்ரிஷாவின் கேரக்டர் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கார்த்தி, இளவரசி… உங்க லொகேஷனை அனுப்புங்க… உங்கள் அண்ணனின் ஓலையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.



    திரிஷாவை கலாய்த்து, அதேநேரம் பொன்னியின் செல்வன் படத்தையும் புரமோட் செய்து கார்த்தி வெளியிட்டுள்ள பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லைக்கா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

    நாளை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi, Actress Trisha, Ponniyin selvan

    அடுத்த செய்தி