கதை, திரைகதை வசனம் எழுதும் யோகிபாபு!

news18
Updated: April 10, 2019, 4:14 PM IST
கதை, திரைகதை வசனம் எழுதும் யோகிபாபு!
நடிகர் யோகி பாபு
news18
Updated: April 10, 2019, 4:14 PM IST
தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் யோகிபாபு.

தமிழ்சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் யோகி பாபு நடித்த தர்மபிரபு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இது அவரது திரைத்துறை பயணத்தில் அடுத்த அவதாரமாக பார்க்கப்படுகிறது.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க, ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் விஜய் 63, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் விழாவில் விஜய் சேதுபதி, ஏ.ஆர்.ரஹ்மான் சுவாரஸ்ய பேச்சு - வீடியோ


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...