என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை - யோகி பாபு உருக்கம்

தன் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.

என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை - யோகி பாபு உருக்கம்
நடிகர் யோகி பாபு
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று வீட்டில் குடும்பத்தினர் உடன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார். அதற்கான வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியானது.

பிறந்தநாள் கொண்டாடியது குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருக்கும் யோகி பாபு, “அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்து விட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால் ஏதேனும் படப்பிடிப்பில் இருப்பேன். அங்கு என் பிறந்தநாளைக் கொண்டாடுவேன். ஆனால் இந்தமுறை வீட்டிலேயே கொண்டாடினேன்.

இந்த பிறந்தநாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்த அளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போதும், பார்க்கும் போதும் இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.


சமூக வலைதளத்தில் எனக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அனைவருக்குமே நான் ‘நன்றி’ சொல்லியிருந்தால், அதற்கு ஒரு நாள் பத்தாது என்று தெரிந்து கொண்டேன். ஆகையால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். இந்த அறிக்கையின் மூலம் உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க: நடிகர்கள் சூரி, விமல் ஆகியோருக்கு அபராதம் விதித்து கொடைக்கானல் வனத்துறை உத்தரவு

மேலும் என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினருக்கும் என் நன்றி” என்று யோகி பாபு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading