Yogi Babu: கிரிக்கெட் பந்துகளை பறக்க விட்ட யோகி பாபு - வீடியோ

Yogi Babu: கிரிக்கெட் பந்துகளை பறக்க விட்ட யோகி பாபு - வீடியோ

யோகி பாபு

சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர் யோகி பாபு.

  • Share this:
    நடிகர் யோகி பாபு தான் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

    நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டின் பரபரப்பான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.



    சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர் யோகி பாபு. கால்பந்து மற்றும் கிரிக்கெட் மீதான தனது அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். இப்போது தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எதிரில் வரும் பந்துகளை அடித்து நொறுக்குகிறார்.

    யோகி பாபுவின் இந்த மாஸ் வீடியோ, நெட்டிசன்களின் அன்பைப் பெற்று வைரலாகி வருகிறது. தவிர, டிக்கிலோனா, கடைசி விவசாயி, மண்டேலா, அயலான், பன்னி குட்டி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: