ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் கலக்கபோகும் யோகிபாபு

தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் கலக்கபோகும் யோகிபாபு

யோகிபாபு

யோகிபாபு

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு 30 படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நகைச்சுவை  நடிகர் யோகி பாபு  தெலுங்கு படத்திலும் கால் பதித்து உள்ளார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் மாளவிகா மோகன் இணைத்து உள்ள இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்பொழுது யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்யில் நடைபெற்று வருகிறது.

  இதற்கு முன்னர் இந்தி திரைப்படத்தில் நடித்து உள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் யோகி பாபு நடித்து இருக்கிறார். ஜவான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.யோகி பாபு அவருடைய காட்சிகளை மும்பை சென்று நடித்து கொடுத்துவிட்டு வந்து இருக்கிறார்.

  கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு 30 படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

  வாரிசு படத்துக்கு தியேட்டர் சிக்கலா? துணிவு விநியோகஸ்தர் உதயநிதி சொன்னது இதுதான்!

   தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவும், மிகவும் பிஸியான நடிகராகவும் மாறியிருப்பவர் யோகிபாபு. ஒரு படத்தின் ஹீரோவுடைய கால்ஷீட்டை எளிதாக பெற்று விடலாம். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று திரைத்துறையினர் கூறும் அளவுக்கு படு பிஸியாக இவர் இருக்கிறார்.

  ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இடம்பெறுகிறார். வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமையால்  யோகிபாபு அனைவரையும் கவர்ந்துள்ளார்.

  2009-ல் வெளியான இயக்குனர் அமீர் நடித்த யோகி படத்தின் மூலம் யோகி பாபு அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், 2014-ல் வெளியான வீரம், மான் கராத்தே, அரண்மனை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அது முதற்கொண்டு யோகி பாபுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

  ஜி.பி முத்து காட்டுல அடை மழை.. விஜய் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி?

  இவரின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மண்டேலா படம் விமர்சனம் ரீதியாக மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும்  யோகி பாபு தனது ரசிகர்களை ஏமாற்றாத வகையில் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசத்தை காட்டி வருகிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor prabhas, Comedy actor Yogi Babu