Home /News /entertainment /

வெளியானது யோகி பாபுவின் பொம்மை நாயகி படம் ஃபர்ஸ்ட் லுக்

வெளியானது யோகி பாபுவின் பொம்மை நாயகி படம் ஃபர்ஸ்ட் லுக்

பொம்மை நாயகி

பொம்மை நாயகி

படங்கள் இயக்குவதுடன் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார் ரஞ்சித். சென்ற வருடம் அவரது தயாரிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

  • News18
  • Last Updated :
    பா. ரஞ்சித் தயாப்பில் நாயகனாக யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    படங்கள் இயக்குவதுடன் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார் ரஞ்சித். சென்ற வருடம் அவரது தயாரிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

    அதனை தொடர்ந்து அவர் தயாரித்த குதிரைவால் திரைப்படம் திரைக்கு வந்தது. கலையரசன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பொம்மை நாயகி என்ற படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். அவருடன் யாழினி பிலிம்ஸ் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.

    பொம்மை நாயகியை ஷான் எழுதி இயக்குகிறார்.  இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா எடிட்டிங்கை கவனிக்க, கலை இயக்குனராக ஜெயரகு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



    Also read... இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை. படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடிகர் யோகி பாவுவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Yogi babu

    அடுத்த செய்தி