கே ஜி எஃப் திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக பீஸ்ட் திரைப்படம் பயந்து ஒருநாள் முன்பாக ரிலீஸாவதாக இணையதளத்தில் ரசிகர்கள் சண்டையிட்டு வந்த நிலையில் இதற்கு கன்னட நடிகர் யாஷ் விஜய்யை விட தான் பெரிய நடிகர் இல்லை எனக் கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடுகளுடன் வெளியானபோதும் வசூல் வேட்டையாடி அசத்தியது. அதனை மிஞ்சும் வகையில் பீஸ்ட் திரைப்படத்தின் வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 14-ஆம் தேதி கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
கே ஜி எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கேஜிஎப் திரைப்படத்தின் வர்த்தகமும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகள் பிரித்து வழங்கப்படும் என்பதால் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கருதப்பட்டது. இதன் காரணமாக முதல் நாள் வசூலை முழுமையாக வேட்டையாடும் வகையில் பீஸ்ட் திரைப்படத்தை திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பை கண்ட அஜித் ரசிகர்கள் நடிகர் விஜய் கேஜிஎப் திரைப்படத்தை பார்த்து பயந்து ஒரு நாள் முன்னதாக திரைப் படத்தை வெளியிடுவதாக விமர்சனங்களை இணையதளத்தில் துவங்க, இதனால் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே பெரும் மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் நேரடி அஜித்-விஜய் நேரடி தாக்குதலாக மாறிய இந்த மோதல் இந்தியா முழுவதும் உள்ள டிவிட்டர் வாசிகளை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு மோசமான தனிமனித தாக்குதலாக மாறி இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.
Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!
இந்நிலையில் அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் நாயகன் யாஷ், இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது மோதல் கிடையாது என விளக்கமளித்துள்ளார். இரண்டு திரைப்படங்களையும் பார்க்க வாய்ப்பு உள்ளபோது எப்படி இரண்டு திரைப்படங்கள் மோதிக் கொள்வதாக கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!
மேலும் விஜய் அடைந்த உயரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் விஜயின் கலைப் பணியும், மக்களை மகிழ்வித்ததையும் தன்னோடு ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்னரே kGF2 வின் ரிலீஸ் தேதி முடிவானதும், பீஸ்ட் படத்திற்கு தமிழ்புத்தாண்டு என்பதும் மட்டுமே இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக காரணம் என்றும் இதில் மோதல் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
வழக்கமாக நடிகர்களுக்குள் உருவாகும் போட்டி வர்த்தகத்திற்கு உதவும் என அந்த போட்டியை வளர்க்கவே பலரும் ஆசைப்படும் நிலையில் விஜய் குறித்த நடிகர் யாஷின் பேச்சு தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.