ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Yash: 700 ரசிகர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்ட யாஷ்!

Yash: 700 ரசிகர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்ட யாஷ்!

ரசிகர்களுடன் யாஷ்

ரசிகர்களுடன் யாஷ்

படங்களைப் பொறுத்தவரை யாஷ் தனது சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களை KGF படத்துக்காக அர்ப்பணித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு மணிநேரம் செலவழித்து தனது 700 ரசிகர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் கன்னட நடிகர் யாஷ்.

KGF படத்திற்கு பிறகு பன்மடங்கு புகழ் பெற்ற கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில், பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அங்கு இருந்த 700-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் செல்பி மற்றும் படங்களை எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தாலும், அந்நிகழ்விற்கு வந்திருந்த ஒவ்வொரு ரசிகர்களுடனும் படம் எடுத்துக் கொண்டார் யாஷ். இதற்கு ஒரு மணிநேரம் ஆனது.

நடிகர் யாஷ் இப்போது தனது அடுத்த படத்தை இறுதி செய்யும் வேலைகளில் உள்ளார். இதற்கிடையில், யாஷின் அன்பான ரசிகர்களுடன் பெங்களூரில் அவர் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட விஷயம் இணையத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் அவரைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து வந்திருந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவித்தன.

அரசியலுக்கு வரும் கே.ஜி.எப் நடிகர் யாஷ்?

படங்களைப் பொறுத்தவரை யாஷ் தனது சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களை KGF படத்துக்காக அர்ப்பணித்தார். KGF 3 பற்றி கூறிய அவர், "எங்களிடம் ஒரு பிளான் உள்ளது, ஆனால் விரைவில் செய்யும் எண்ணம் இல்லை. இப்போது நான் வேறு ஏதாவது செய்ய விரும்புகிறேன். 6-7 வருடங்களாக, நான் KGF படத்தில் வேலை செய்தேன். எனவே, எல்லாம் சரியானால், KGF 3 படத்தை பிறகு உருவாக்குவோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: