• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yash: பிரமாண்டமாக நடந்த ‘கே.ஜி.எஃப்’ யாஷ் வீட்டு விசேஷம்!

Yash: பிரமாண்டமாக நடந்த ‘கே.ஜி.எஃப்’ யாஷ் வீட்டு விசேஷம்!

யாஷ் - ராதிகா

யாஷ் - ராதிகா

பெங்களூருவில் உள்ள ’பிரெஸ்டீஜ் கோல்ஃப்’ அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கினார் யாஷ்.

  • Share this:
    ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் கன்னட நடிகர் யாஷ், அவரது மனைவி ராதிகா பண்டிட் மற்றும் அவரது தாயார் புஷ்பா ஆகியோரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. காரணம் புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

    நேற்று ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற யாஷ் மற்றும் ராதிகாவின் வீட்டு கிரகபிரவேச விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வலம் வந்தன. இவர்கள் பெங்களூருவில் உள்ள தங்கள் புதிய வீட்டில் பாரம்பரிய முறைப்படி பூஜை நடத்தினர். இதில் அவர்களது குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

    பெங்களூருவில் உள்ள ’பிரெஸ்டீஜ் கோல்ஃப்’ அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கினார் யாஷ். வீட்டின் உட்புற வேலைகள் சில காலமாக நடந்து கொண்டிருந்தன. இப்போது அது முடிந்துவிட்டதால், குடும்பம் அங்கு குடிபெயர்ந்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார் யாஷ். சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா பெருந்தொற்றால் தள்ளிப்போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: