சென்னையில் நடைபெற இருந்த திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள நடிகரும், நடிகையும் ஒரே காரில் வந்தபோது, நடிகரின் மனைவி, காரை வழிமறித்து நடிகையை தாக்கினார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மிஸ்ரா. சமீபத்தில் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் மொஹந்தியுடன் சேர்ந்து நடித்திருந்தார். ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு இருவரும் ஒப்பந்தமாகி இருந்தனர். இதற்கான சூட்டிங் சென்னையில் நடைபெற இருந்தது.
சென்னைக்கு வருவதற்காக ஞாயிற்று கிழமை காலையில் நடிகை மிஸ்ராவும், நடிகர் மொஹந்தியும் ஒரே காரில் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது புவனேஸ்வரில் நடுரோட்டில் அவர்களின் காரை நடிகர் மொஹந்தியின் மனைவி திருப்தி வழிமறித்தார்.
காரின் கதவை திறந்து உள்ளே சென்ற திருப்தி, நடிகை மிஸ்ரா, நடிகர் மொஹந்தி இருவரையும் அடித்து உதைத்தார். அதோடு நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து காரிலிலிருந்து வெளியில் இழுத்தார். அடி உதையிலிருந்து தப்பிக்க காரை விட்டு வெளியில் வந்த மிஸ்ராவை ரோட்டில் வைத்து திருப்தி அடித்து உதைத்தார்.
மிஸ்ரா அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நோக்கி ஓடினார். அவரை திருப்தி விரட்டிச் சென்று திருப்தி தாக்க முயல, நடிகை மிஸ்ரா ஆட்டோவில் ஏறி தப்பித்தார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தை பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள முதல் இந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அவர்களில் சிலர் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட சம்பவம் வைரலாக பரவி விட்டது. நடிகை மிஸ்ராவுக்கும், நடிகர் மொஹந்திக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருப்பதாக திருப்தி குற்றம்சாட்டியுள்ளார். நடிகை தாக்கப்பட்டது குறித்து அவரது தாயார் புவனேஸ்வர் போலீஸில் புகார் செய்து இருக்கிறார்.
நடிகர் மொஹந்தி கூறுகையில், ``நானும் நடிகை மிஸ்ராவும் விமான நிலையத்திற்கு சென்றபோது வழியில் என் மனைவியும், அவர் தந்தையும் காரை மடக்கி எங்களை அடித்தனர் என்று கூறினார். நடிகை மிஸ்ரா எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தோழி. ஆனால் என் மனைவிக்கு திரைப்படத்துறையில் நம்பிக்கை இல்லை. இனிமேல் நான் நடிகை மிஸ்ராவுடன் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் மொஹந்தி கூறினார். நானும், நடிகர் மொஹந்தியும் வெறும் நண்பர்கள் மட்டுமே. தற்போது நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்று நடிகை மிஸ்ராவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.