கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை... அலட்சியம் ஆபத்து - விவேக்

கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை ஆனால் அலட்சியம் காட்டுவது ஆபத்து என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை... அலட்சியம் ஆபத்து - விவேக்
நடிகர் விவேக்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறை பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். அதேவேளையில் பெரும்பாலான நடிகர்கள் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேட்டியளித்திருக்கும் நடிகர் விவேக், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முன்னுரிமை கொடுக்கவில்லையோ என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை. ஆனால் அலட்சியம் காட்டுவது ஆபத்தானது.

ஏராளமானோர் மாஸ்க் என்ற பெயரில் ஏதோ ஒரு துணியைப் போட்டிருப்பதை பார்க்கிறேன். மாஸ்க் அணிவதென்பது மூக்கையும், வாயையும் மூடும் வகையில்  மாஸ்க் அணிய வேண்டும்.


சிலர் மாஸ்க்கை கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர். அதேபோல் வெளியில் சென்றால் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் சோப்பை பயன்படுத்தி கை, கால்களைக் கழுவுவது, குளித்து விடுவது அவசியம். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

கொரோனாவை விட மோசமானது என்னவென்றால் நமக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற பயம் தான். நமக்கு ஒன்றும் வராது. நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும்” இவவாறு நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading