விஜய் - அஜித் ரசிகர்களின் அநாகரீக பதிவுகள்...! கடுமையாக சாடிய விவேக்

விஜய், அஜித் இருவரும் இவ்வாறான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கூறினாலும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை.

விஜய் - அஜித் ரசிகர்களின் அநாகரீக பதிவுகள்...! கடுமையாக சாடிய விவேக்
விவேக்
  • Share this:
ட்விட்டரில் தரம்தாழ்ந்து எதிர்மறை பதிவுகளை பதிவிடும் விஜய், அஜித் ரசிகர்களை நடிகர் விவேக் சாடியுள்ளார்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பொழுதுபோக்கும் விதமாக தொலைக்காட்சிகள் நாள்தோறும் பல திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் நடிகர் அஜித் - விஜய் நடித்த படங்கள் ஒளிபரப்பாகும் போதெல்லாம், அதை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.


ட்ரெண்ட் செய்வது ஒருபுறம் இருந்தாலும், ஒருவர் மாறி ஒருவர் நடத்தும் அநாகரீக வார்த்தை யுத்தம் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதை கவனித்த விஜய், அஜித் இருவரும் இவ்வாறான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கூறினாலும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விவேக், “நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறிச் செய்தால் பிளாக்( Block) ஆகும். நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.



மேலும் படிக்க: சிவகார்த்திகேயனின் முதல் படம் நான் இயக்கியதாக இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன்
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading