விஜய் ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விவேக்!

தற்போது மரம் நடுதலை விஜய் ரசிகர்கள் கையிலெடுத்துள்ளனர். அதற்காக #BIGILTreePlantingChallenge என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்நடவடிக்கையை கவனித்த நடிகர் விவேக் அவர்களை மனதார வாழ்த்தியுள்ளார்.

news18
Updated: August 15, 2019, 7:37 PM IST
விஜய் ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விவேக்!
விஜய் ரசிகர்கள் | விவேக்
news18
Updated: August 15, 2019, 7:37 PM IST
மரம் நடுதலைக் கையிலெடுத்திருக்கும் விஜய் ரசிகர்களை விவேக் வாழ்த்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளமும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய் ரசிகர்கள், இந்த ஆண்டு விலையில்லா விருந்தகத்தை அமைத்து பசியில் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது மரம் நடுதலை விஜய் ரசிகர்கள் கையிலெடுத்துள்ளனர். அதற்காக #BIGILTreePlantingChallenge என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்நடவடிக்கையை கவனித்த நடிகர் விவேக் அவர்களை மனதார வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்! வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.விவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நடுமாறு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி இருந்தார். அதை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விவேக் அதற்காக கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி, மரம் நடுவது குறித்த தீவிர விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

வீடியோ பார்க்க: காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து!

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...