Actor Vivek: 'நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது' - நடிகர் வடிவேலு கண்ணீர்

Actor Vivek: 'நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது' - நடிகர் வடிவேலு கண்ணீர்

வடிவேலு - விவேக்

நடிகர் விவேக் மரணமடைந்த செய்தியைக் கேட்டு துக்கம் தொண்டையை அடைப்பதாக நடிகர் வடிவேலு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மரணமடைந்த செய்தியைக் கேட்டு துக்கம் தொண்டையை அடைப்பதாக நடிகர் வடிவேலு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

    அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பரும், அவரது சக நகைச்சுவை நடிகருமான வடிவேலு தனது நண்பனின் மரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.



    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்னைக்கு காலைல செய்தில பாத்தேன். என்னுடைய நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்ல இறந்த செய்தியைக் கேட்டு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு. அவரும் நானும் நிறைய படங்கள்ல இணைஞ்சு பணியாற்றியிருக்கோம். அவனப் பத்தி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன், பொதுவுலக சிந்தனை அதிகமா இருக்கும் அவனுக்கு. அப்துல் கலாம் ஐயா கிட்ட நல்ல நெருக்கமா இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம்... நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும். என்ன விட எளிமையா ரொம்ப நல்லா பேசுவான். அவனுக்கு இப்படியொரு நிலைமை வந்தது, ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல, இந்த நேரத்துல நான் என்ன பேசுறதுன்னே எனக்கு தெரியல. அவன நேர்ல பாத்து அஞ்சலி செலுத்த என்னால முடியல, ஏன்னா நான் இங்க மதுரைல இருக்கேன். என் தாயாரோட இருக்கேன் நான். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன். நீங்க எல்லாரும் ரொம்ப தைரியமா இருக்கணும். யாரும் மனசு விட்டுட கூடாது. விவேக் எங்கயும் போகல, உங்களோட தான் இருக்கான். மக்களோட மக்களா நிலைச்சு இருக்கான். அவன் ஆன்மா சாந்தியடையணும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: