Actor Vivek: 'என்னுடன் நடித்தார்-வழி நடத்தினார்' உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Actor Vivek: 'என்னுடன் நடித்தார்-வழி நடத்தினார்' உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

விவேக் - உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக்கின் மறைவுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். பகுத்தறிவு, சமூக சிந்தனை, விழிப்புணர்வு என சமூகத்துக்கு தேவையான விஷயங்களை பொழுதுபோக்கு வடிவில் கொண்டு சேர்த்ததில் விவேக்கின் பங்கு முக்கியமானது. அவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    இதையடுத்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், “அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். 'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு.

    தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: