Actor Vivek: 'தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள்' சூர்யா ட்வீட்

Actor Vivek: 'தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள்' சூர்யா ட்வீட்

சிங்கம் படத்தில்...

நடிகர் விவேக் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, தனது ட்விட்டரிலும் இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, தனது ட்விட்டரிலும் இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாகவும் 24 மணிநேரம் கழித்து தான் மேற்படி உடல்நிலை குறித்து சொல்ல முடியும் எனவும் மருத்துவமனை தரப்பில் நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    இந்நிலையில் இன்று காலை முதல் விவேக்கின் உடலுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூகவலைதளங்களிலும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து, ”மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்... மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்...” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: