• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: 'மறைவுக்குங்கற வார்த்தையை பயன்படுத்த...' விவேக் மறைவுக்கு சத்யராஜ் இரங்கல்

Actor Vivek: 'மறைவுக்குங்கற வார்த்தையை பயன்படுத்த...' விவேக் மறைவுக்கு சத்யராஜ் இரங்கல்

விவேக் மறைவு

விவேக் மறைவு

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் தனது இரங்கலை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் தனது இரங்கலை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், “சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சு சின்ன கலைவாணர்ன்னு பேர் வாங்குன என் அன்புத்தம்பி விவேக்... எப்படி சொல்றது? அவரது மறைவுக்குங்கற வார்த்தையை பயன்படுத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் நம்மளோட இல்லாம போனதுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிச்சுக்குறேன். வார்த்தைகளால அவரது குடும்பத்துக்கோ, ரசிகர்களுக்கோ, கலையுலகத்துக்கோ, எனக்கோ ஆறுதல் சொல்றது முடியாத காரியம். தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களில், சகோதரர்களில் நானும் ஒருத்தன் தம்பி... என்ன பேசுறதுன்னே தெரில” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: