Actor Vivek: நடிகர் விவேக் மறைவு - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Actor Vivek: நடிகர் விவேக் மறைவு - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

விவேக் - மோடி

நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். பகுத்தறிவு, சமூக சிந்தனை, விழிப்புணர்வு என சமூகத்துக்கு தேவையான விஷயங்களை பொழுதுபோக்கு வடிவில் கொண்டு சேர்த்ததில் விவேக்கின் பங்கு முக்கியமானது. அவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நடிப்பு தவிர பல லட்சக் கணக்கான மரங்களை தமிழகம் முழுவதும் நட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    இதையடுத்து நடிகர் விவேக்கின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும், வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: