Actor Vivek: ’மக்களிடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியவர்' விவேக் குறித்து யுவன்

விவேக் - யுவன் ஷங்கர் ராஜா

நடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் 24 மணி நேரம் கழித்தே, அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என மருத்துவமனை தரப்பில், நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து விவேக் மீண்டு வர வேண்டுமென பிரபலங்களும், ரசிகர்களும் மனமுருகி பதிவிட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள விவேக்கின் உடலுக்கு பிரபலங்களும், ரசிகர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளங்களில், “உண்மையிலேயே வெற்றிகரமான நபர் என்பவர், மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவர் தான். விவேக் சார் ஒரு நல்ல மனிதர், அவர் தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல், அவரது ஞானத்தால் மக்களை சிந்திக்கவும் வைத்தார். இது நமக்கு மிகப்பெரிய இழப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: