Actor Vivek: ’வாழ்க்கையை வழி நடத்த சிறந்த எடுத்துக்காட்டு' வருண் சக்ரவர்த்தி இரங்கல்

விவேக் - வருண் சக்ரவர்த்தி

நடிகர் விவேக் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவையாலும், பகுத்தறிவு கருத்துகளாலும் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரியும் சிவனும் ஒண்ணு, அத அறியாதவன் வாயில மண்ணு - நடிகர் விவேக். அவர் வாழ்க்கையை வாழ்ந்த விதத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நகைச்சுவையால் இந்த சமூகத்திற்கும், லட்சக் கணக்கான மரங்களை நட்டு இயற்கைக்கும் நிறைய செய்துள்ளார். வாழ்க்கையை வழி நடத்த சிறந்த எடுத்துக்காட்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: