Actor Vivek: ’நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்' ஹர்பஜன் சிங் ட்வீட்

Actor Vivek: ’நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்' ஹர்பஜன் சிங் ட்வீட்

விவேக் - ஹர்பஜன் சிங்

நடிகர் விவேக் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



    இந்நிலையில் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங், “உங்களை எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்.. பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: