Actor Vivek: 'மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது' விவேக் மறைவு குறித்து தினேஷ் கார்த்திக்

விவேக் - தினேஷ் கார்த்திக்

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின் மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், “மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும், அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும். திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளை கொண்டு சேர்த்த ஒரு லெஜெண்ட். தனிப்பட்ட முறையில் எனக்கு மின்னலே மற்றும் ரன் ஆகியப் படங்கள் மிகவும் பிடிக்கும். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: