Actor Vivek: 'உங்கள் இழப்பு எங்கள் இதயங்களை உடைக்கிறது’ விவேக் குறித்து மம்மூட்டி

விவேக் மம்மூட்டி

நடிகர் விவேக் மறைவுக்கு மலையாள நடிகர் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் மறைவுக்கு மலையாள நடிகர் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.



    இதையடுத்து அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாகவும் 24 மணிநேரம் கழித்து தான் மேற்படி உடல்நிலை குறித்து சொல்ல முடியும் எனவும் மருத்துவமனை தரப்பில் நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. அதோடு விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் விவேக்கின் உடலுக்கு இன்று காலை முதலே திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டி, “இளைப்பாறுங்கள் விவேக். தனது முழு வாழ்க்கையிலும் எங்களை சிரிக்க வைத்த ஒருவர், உங்கள் இழப்பு உண்மையிலேயே எங்கள் இதயங்களை உடைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: