Home /News /entertainment /

Actor Vivek: விவேக் மறைவு - இதயம் உடைந்த தனுஷ்

Actor Vivek: விவேக் மறைவு - இதயம் உடைந்த தனுஷ்

தனுஷ் - விவேக்

தனுஷ் - விவேக்

நடிகர் விவேக் மறைவுக்கு, நடிகர் தனுஷ் தனது இரங்கலை உணர்வுப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விவேக் மறைவுக்கு, நடிகர் தனுஷ் தனது இரங்கலை உணர்வுப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். பகுத்தறிவு, சமூக சிந்தனை, விழிப்புணர்வு என சமூகத்துக்கு தேவையான விஷயங்களை பொழுதுபோக்கு வடிவில் கொண்டு சேர்த்ததில் விவேக்கின் பங்கு முக்கியமானது. அவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.



    அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் தனுஷ் “விவேக் சார்” எனக் குறிப்பிட்டு மூன்று இதயம் உடைந்த எமோஜிக்களையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    படிக்காதவன், உத்தமபுத்திரன், வேலையில்லா பட்டதாரி ஆகியப் படங்களில் தனுஷ் - விவேக்கின் நகைச்சுவை ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. கடந்த வாரம் கர்ணன் படத்தைக் குறிப்பிட்டு, ‘எப்போவாது ஹிட் குடுத்தா பரவால, எப்போவுமே ஹிட் குடுத்தா எப்படி’ என தனுஷை பாராட்டி விவேக் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vivek, Dhanush

    அடுத்த செய்தி