ஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்

”நான் பதிவிட்ட கருத்து ஒரு பெண்ணை காயப்படுத்தியிருந்தால் கூட அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் அந்த பதிவையும் நீக்கி விட்டேன்”

ஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்
விவேக் ஓபராய் | ஐஸ்வர்யா
  • News18
  • Last Updated: May 21, 2019, 12:36 PM IST
  • Share this:
ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரீகமாக சித்தரித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை விமர்சித்திருந்த விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார். 

மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று மாலை கருத்து கணிப்புகள் வெளியானது. இதில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் விமர்சித்தும், வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டலடிக்கிறேன் என்ற பெயரில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து அந்த மீம்ஸ் போடப்பட்டுள்ளது.


ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் ஆகிய இருவரும் காதலிப்பதாக 2000-ம் ஆண்டுகளில் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் 2002-ல் பிரிந்தாக கூறப்பட்டது. பிறகு ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுவும் பிரிவில் முடிந்ததாக தகவல்கள் வந்தன.

பின்னர், 2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.

Loading...

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டலடிக்கும் வகையில் விவேக் ஓபராய் இந்த மீம்ஸை பகிர்ந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து விவேக் ஒப்ராய் ட்வீட் செய்திருந்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிரிப்புகள் கிளம்பியிருந்த  நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ளார் விவேக் ஓபராய்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “சில நேரங்களில் யார் மனதையும் புண்படுத்தாது என்று ஒருவருக்கு தோன்றும் விஷயங்கள் சிலர் மனதை காயப்படுத்தும். நான் கடந்த 10 வருடங்களாக 2000-க்கும் அதிகமான ஆதரவற்ற பெண்களின் சுயமுன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளேன். நான் எந்த ஒரு பெண்ணையும் மரியாதைக்குறைவாக நடத்த வேண்டும் என்று நினைத்ததில்லை.



நான் பதிவிட்ட கருத்து ஒரு பெண்ணை காயப்படுத்தியிருந்தால் கூட அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் அந்த பதிவையும் நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தென்னிந்திய இயக்குநர்களை புறக்கணிக்கிறதா பாலிவுட் திரையுலகம்?

First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...