Actor Vivek: ’ஒரு ரிவைண்ட் பட்டன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்’ செல் முருகன் உருக்கமான பதிவு

செல் முருகன் - விவேக்

மறைந்த நடிகர் விவேக்குடனான நினைவலை குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துக் கொண்டுள்ள அவரின் மேலாளர் செல் முருகன், ’ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    மறைந்த நடிகர் விவேக்குடனான நினைவலை குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துக் கொண்டுள்ள அவரின் மேலாளர் செல் முருகன், ’ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.



    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் - திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர். அதோடு விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் பலர் மரக்கன்றுகளுடன் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நடிகருமான செல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விவேக் இசைக்கருவியை வாசிக்க, அதற்கு ஏற்றார் போல், முக பாவனை செய்கிறார் செல் முருகன். இதைப் பார்க்கும் ரசிகர்களின் கண்கள் கலங்குகின்றன. அதற்கு ’ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்’ எனவும் தலைப்பிட்டிருக்கிறார் செல் முருகன்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: