Vivek: அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி

மிர்ச்சி சிவா - விவேக்

தனது காமெடியில் பகுத்தறிவு சிந்தனைகளையும், சமூக கருத்துக்களையும் தூக்கலாக வைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் விவேக்.

  • Share this:
    மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி, ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரைப்பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. தனது காமெடியில் பகுத்தறிவு சிந்தனைகளையும், சமூக கருத்துக்களையும் தூக்கலாக வைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் விவேக். அவரது திடீர் மரணம் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விவேக்கின் நடிப்பில் அரண்மனை 3 மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. தவிர, மிர்ச்சி சிவாவுடன் அவர் தொகுத்து வழங்கிய ’LOL: எங்க சிரி பாப்போம்’ எனும் காமெடி ரியாலிட்டி ஷோ அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.



    இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர்கள் பிரேம்ஜி, சதிஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், டிவி பிரபலம் புகழ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளார்கள். சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்நிகழ்ச்சியின் டாஸ்க். 6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: