தளபதி 63: மிரட்டல் அப்டேட் கொடுத்த விவேக்!

தளபதி 63: மிரட்டல் அப்டேட் கொடுத்த விவேக்!
விஜய்
  • News18
  • Last Updated: June 2, 2019, 11:24 AM IST
  • Share this:
சமூகவலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் விவேக் பதிலளித்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் 12-வது முறையாக நடிகர் விவேக் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் இந்த மாதத்தை விஜய் பிறந்த நாள் மாதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய அடுத்தப் படம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நடிகர் விவேக், “விஜய் 63. மிரட்டலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.



இதைக்குறிப்பிட்டிருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிறந்தநாள் மாதம் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க: விஜய்க்கு ஹிட் கொடுத்த 28 இயக்குநர்கள்!

First published: June 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்