• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: விவேக் குடும்பத்தினர் தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு நன்றி

Actor Vivek: விவேக் குடும்பத்தினர் தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு நன்றி

விவேக் குடும்பத்தினர்

விவேக் குடும்பத்தினர்

காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு, அவரது குடும்பத்தினர் அரசுக்கும், காவல்துறைக்கும், ரசிகர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு, அவரது குடும்பத்தினர் அரசுக்கும், காவல்துறைக்கும், ரசிகர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

    இதையடுத்து விவேக்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக்கின் குடும்பத்தினர் அரசு, காவல்துறை மற்றும் ரசிகர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த வேளையில் எங்கள் குடும்பத்துக்கு பக்க பலமாக நின்ற, மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றைக்கும் நன்றியோடு நாங்கள் நினைத்துப் பார்ப்போம். நீங்க கொடுத்தது என் கணவருக்கு மிகப்பெரிய கெளரவம். அடுத்து காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரைக்கும் நீங்க கூட நின்னீங்க, ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்துறையில் இருக்கும் சகோதரர்களுக்கு நன்றி. உலகெங்கும் இருக்கும் என் கணவரின் ரசிகர்களுக்கும், நேற்று நெடுதூரம் அவருடன் வந்தவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: