• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: கடைசி வரை நிறைவேறாத விவேக்கின் இரண்டு ஆசைகள்

Actor Vivek: கடைசி வரை நிறைவேறாத விவேக்கின் இரண்டு ஆசைகள்

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் விவேக், மாரடைப்பால் நேற்று காலமானர். அவரது மறைவு சினிமா உலகத்தினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  • Share this:
    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் விவேக், மாரடைப்பால் நேற்று காலமானர். அவரது மறைவு சினிமா உலகத்தினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதோடு தொலைக்காட்சிகளில் விவேக் குறித்த நினைவலைகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.



    இந்நிலையில் விவேக்கின் நிறைவேறாத 2 ஆசைகள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆசைப்படி தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்ட அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். அவரால் 1 கோடியை எட்ட முடியவில்லை. அதோடு திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த விவேக், விரைவில் படம் ஒன்றை இயக்கவும் திட்டமிருந்தார். இதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். கதை விவாதம், நடிகர்-நடிகை மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தேர்வு நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நடந்த அவரது மறைவால், விவேக்கை ஒரு இயக்குநராக பார்க்கும் வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: