Actor Vivek: ’அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ - செல் முருகன்

செல் முருகன் - விவேக்

'எனக்கு அவரை தவிர வேறு யாருமில்லை’ என மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும், நடிகருமான செல் முருகன் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    'எனக்கு அவரை தவிர வேறு யாருமில்லை’ என மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும், நடிகருமான செல் முருகன் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் - திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.



    இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல் முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கறுப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் RIP-யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீருடன் கடந்து கொள்வார்கள். ஆனால், உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே. இங்கே எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார்? துணை. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை? யார் துணை? யார் துணை?” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    செல் முருகனின் இந்தப் பதிவு ரசிகர்களின் கண்களை பதம் பார்த்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: