Actor Vivek: நடிகர் விவேக் திடீர் மயக்கம் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Actor Vivek: நடிகர் விவேக் திடீர் மயக்கம் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

நடிகர் விவேக்

நடிகர் விவேக் தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் திடிரென மயங்கி விழுந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நகைச்சுவை விவேக் இன்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ”நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சுயநினைவோடு உள்ளார்” என மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் நலம் பெற்று வர வேண்டுவதாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    தவிர விவேக் நேற்று தான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” எனத் தெரிவித்து இருந்தார்.

    நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் இன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: