ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டா குஸ்தி ரிலீஸ் எப்போது - வெளியானது சூப்பர் அப்டேட்!

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டா குஸ்தி ரிலீஸ் எப்போது - வெளியானது சூப்பர் அப்டேட்!

கட்டா குஸ்தி

கட்டா குஸ்தி

இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பில் உருவாகியிருக்கும் கட்டா குஸ்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாவனர் நடிகர் விஷ்ணு விஷால். ‘இன்று நேற்று நாளை’ முண்டாசுப்பட்டி, ‘ராட்சசன்’, ‘எப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அடுத்து 'கட்டா குஸ்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ செல்லா அய்யாவு இயக்குகிறார்.  விஷ்ணு விஷாலும், தெலுங்கு பிரபல நடிகர் ரவிதேஜாவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து உள்ளனர்.

கட்டா குஸ்தி என்பது, மணல் தரையில் விளையாடும் மல்யுத்தம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அது விளையாடப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் இப்படம் உருவாகிறது. கன்னடப் படமான ‘கோதா’வும் குஸ்தியை பின்புலமாக கொண்ட படம் என்றாலும், அந்த கதை வேறு, இந்த கதை வேறு. இது ‘கோதா’ படத்தின் ரீமேக் கிடையாது என்றும் விஷ்ணு விஷால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Also read... துணிவு படம் குறித்து இசையமைப்பாளர் கொடுத்த அப்டேட்... கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரவி தேஜா நடித்துள்ளார். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

இந்நிலையில் கட்டா குஸ்தி படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vishnu Vishal