பிப்ரவரி 11ஆம் தேதி விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் எப்ஐஆர் திரைப்படம் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படத்தை வெளியிடுகிறார்கள். தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும் தெலுங்கில் படம் வெளியாகிறது.
எப்ஐஆரின் தெலுங்கு ட்ரெய்லரை தெலுங்கின் முன்னணி இளம் நடிகர் நானி வெளியிட்டார். தமிழ் அளவுக்கு தெலுங்கிலும் விஷ்ணு விஷால் கவனம் செலுத்துகிறார். காடன் திரைப்படத்தில் அவர் ராணாவுடன் நடித்ததற்கான முக்கிய காரணமே அப்படம் தெலுங்கில் தனக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தரும் என்பதற்காகத்தான்.
ராட்சசன் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் டிஜிட்டல் மீடியா வழியாக அத்திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கண்டு ரசித்தனர். அதற்கு பெரும் வரவேற்பு அளித்தனர். படத்தை தெலுங்கில் டப் செய்து திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று விஷ்ணு விஷால் விரும்பினார். ஆனால் ரீமேக் ரைட்ஸை தயாரிப்பாளர் விற்பனை செய்திருந்த காரணத்தினால் திரையரங்கில் ராட்சசன் தெலுங்கு பதிப்பு வெளியாகவில்லை.
எப்ஐ ஆர் படத்தின் தயாரிப்பாளரும் விஷ்ணு விஷால் என்பதால் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார். படத்தின் டிரைலரை பார்த்த ரவிதேஜா விஷ்ணு விஷாலை பாராட்டியிருந்தார். நானி, ரவிதேஜா இருவருக்கும் எப்ஐஆர் திரைப்படம் ஸ்பெஷலாக திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இருவரும் விஷ்ணு விஷாலை வெகுவாக பாராட்டியுள்ளனர். படம் இருவருக்கும் மிகவும் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக விஷ்ணு விஷாலும் கூறியிருந்தார்.
Also read... தமன் இசையில் பாடகியான அதிதி ஷங்கர்...!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vishnu Vishal