‘கோ கொரோனா’... விஷ்ணு விஷால் பகிர்ந்த முண்டாசுப்பட்டி மீம்!

‘கோ கொரோனா’... விஷ்ணு விஷால் பகிர்ந்த முண்டாசுப்பட்டி மீம்!
நடிகர் விஷ்ணு விஷால்
  • Share this:
முண்டாசுப்பட்டி படத்தில் இடம்பெற்ற நகைச்சுவையான காட்சியை கொரோனா மீமாக வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதேபோல் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் தொடங்கி முன்னணி திரைபிரபலங்களும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகள் ஏந்தி ஆதரவு தெரிவித்தனர். எனினும், பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சாலைகளில் தீப்பந்தத்துடன் வலம் வந்த சிலர் ‘கோ கொரோனா’ என்று முழக்கமிட்டபடி சென்ற வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகின.


இந்நிலையில் பிரதமர் வேண்டுகோளின்படி டார்ச் லைட் அடித்து புகைப்படம் வெளியிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், அதனுடன் முண்டாசுப்பட்டி படத்தில் இடம்பெற்ற மூடநம்பிக்கையான நகைச்சுவை காட்சியை மீமாக வெளியிட்டுள்ளார். அதனுடன், “இந்தியா முழுவதும் தற்போது முண்டாசுப்பட்டி காலம் தான். கருத்துகளை பதிவிடுங்கள்” என்று விஷ்ணு விஷால் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: ஊரடங்கு நாட்கள் - பால் கறக்கும் பணியில் மாஸ்டர் பட நடிகர்


First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading