நடிகர் விஷ்ணு விஷால் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். தொற்று பாதித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்டுத்தி வருகிறார்.
Also Read : ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா?
கொரோனா தொற்றால் பெரும்பான்மையான நடிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது அலை அடித்து ஓய்ந்த நிலையில் தற்போது மூன்றாம் அலை உலகம் முழுவதும் வீசி வருகிறது. கமல்ஹாசன், திரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டுள்ளனர்.
சற்று வயதான மற்றும் பல்வேறு நோய்களைக்கொண்ட திரை நட்சத்திரங்கள், அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் மரணத்தை சந்தித்தார்கள். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
கடைசியாக நான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டேன். எனக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதற்காக மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு லேசானதாக இல்லை. பாதிப்பின்போது, 10 நாட்களாக வைரஸ் என்னை படுத்தி எடுத்து விட்டது. இப்போதும் நான் சோர்வாக உணர்கிறேன். விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன். என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அத்தனை அன்புக்கும் நன்றி. எனது படங்கள் தொடர்பான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதை எதிர்நோக்கியுள்ளேன்.
Finally out of covid...
Mine was #OMICRON (took a gene test)..
It was not mild at all..
Had really tuff 10 days..
Lot of tiredness still..
Hope to get back on track real soon..
Thank you for all the luv..
Looking forward to share lots of work developments with everyone..
:)
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) January 18, 2022
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ரவிதேஜாவுடன் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் அவர், எஃப்.ஐ.ஆர் மற்றும் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vishnu Vishal