தனது படத்தில் பணியாற்றுபவர்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் - விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு

வீட்டில் முடங்கி இருக்கும் பணியாளர்களுக்கும் விஷ்ணு விஷால் சம்பளம் கொடுத்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

தனது படத்தில் பணியாற்றுபவர்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் - விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு
நடிகர் விஷ்ணு விஷால்
  • Share this:
கொரோனா பரவலால் உள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும் தனது படத்தில் பணியாற்றுபவர்களுக்கு சரியாக சம்பள்ம் கொடுத்து வருகிறார் விஷ்ணு விஷால்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் தடைபட்டுள்ளன. இதனால் திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல் தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தனது சம்பளத்தில் இருந்து 25% சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நேற்று அறிவித்தார். அவருக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

அவரைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் தனது நிறுவனம் தயாரிக்கும் 3 படத்தில் பணியாற்றும் அனைவருக்குமே தொடர்ச்சியாக சம்பளம் கொடுத்து வருகிறார். இத்தகவலை அருண் வைத்தியநாதன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பணி செய்யாமல் வீட்டில் முடங்கி இருக்கும் பணியாளர்களுக்கும் விஷ்ணு விஷால் சம்பளம் கொடுத்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால் மது ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர், முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன் தாஸ், இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநர் செல்லா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தையும் தயாரித்து நடிக்க உள்ளார்.
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading